''ஸ்பெயின் நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு ''- முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் பேட்டி
தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இதில், உலகில் முன்னணி நிறுவனங்கள் பல தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்கவுள்ள உள்ளதாக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டன. இதன் மூலம் பல ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுமுறை பயணமாக ஸ்பெயின் செல்லவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் 8 நாட்கள் அரசுமுறை பயணமாக ஸ்பெயின் புறப்பட்டார்.
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தியாவில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு உகந்த மாநிலம் என்பதை எடுத்துரைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதே இலக்கு. ஸ்பெயின் நாட்டில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.