அதிமுக பெரிய விலை கொடுக்க நேரிடும்- ராம சீனிவாசன்
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன.
கடந்த 2 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது.
எனவே இம்முறை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 27 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து, பாஜகவை வீழ்த்த திட்டமிட்டுள்ளன.
தமிழகத்தில் அதிமுக கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. சமீபத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாஜகவுடனா கூட்டணி முறிந்ததாக அறிவித்த நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது குறித்து பாஜக மீது விமர்சனம் கூறியிருந்தார்.
இந்த நிலையில், அதிமுக பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
பாஜகவுடன் கூட்டணிக்கு வராவிடில் வரும் காலங்களில் அரசியல் ரீதியாக அதிமுகவினர் வருந்துவார்கள். பாஜகவை சாதாரணமாக கருதுகிறார்கள், ஆனால், அப்படியில்லை என்பதை தெரிந்துகொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.