வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 27 ஜனவரி 2024 (20:14 IST)

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் இணைய வாய்ப்பில்லை -TTV தினகரன்

dinakaran
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகள் மற்றும் மாநில கட்சிகள் தயாராகி வருகின்றன.

இந்த நிலையி,  எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்கி வரும் அதிமுகவுடன் சேருவதற்கு வாய்ப்பே இல்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திண்டிவனத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது:

இந்தியா கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக பிரிந்து வருகின்றனர். பாராளுமன்ற தேர்தலின்போது அக்கூட்டணியில் மு.க.ஸ்டாலின் மட்டும்தான் இருப்பார். கொட நாடு கொல்லை வழக்கில் சாட்சியங்களை எதிர்த்தரப்பினர் கலைத்ததாக தகவல் வெளியாகிறது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் காவல்துறை வெற்றி பெறவேண்டும்.  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் அமுமுக இணைய வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.