1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmk started its alliance talk with polytical parties

யாருக்கு எவ்வளவு தொகுதி?.. பேச்சுவார்த்தையை துவங்கிய திமுக!..

mk stalin
2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த திமுக 2026 சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வியூகங்களை வகுத்து வருகிறது. முக்கியமாக கடந்த தேர்தலில் அந்த கட்சியுடன் கூட்டணி அமைத்த அதே கட்சிகளுடன் இந்த முறையும் கூட்டணி அமைத்திருக்கிறது திமுக. அதேநேரம் தேமுதிகவும், கமலின் மக்கள் நீதி மையமும் புதிதாக இந்த கூட்டணியில் இணைந்திருக்கிறது..

தொகுதி பங்கீடு பற்றி பேசுவதற்காக டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின். அந்த குழு ஒவ்வொரு கட்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. பிப்ரவரி 22ம் தேதி இன்று தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை அறிவாலயத்தில் துவங்கியது. முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த முறை 5 தொகுதிகளை கேட்க அந்த கட்சி திட்டமிட்டிருக்கிறது.

தொடர்ந்து மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் லீக் போன்ற எல்லா கட்சிகளிடமும் திமுக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. அனேகமாக காங்கிரசுக்கு 28, தேமுதிகவுக்கு 6, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6, அதிமுகவுக்கு 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6, விடுதலை சிறுத்தை கட்சிக்கு 6, முஸ்லீம் லீக் கட்சிக்கு 3, ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு 2, மனிதநேய மக்கள் கட்சிக்கு 2, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மீதமுள்ள 167 தொகுதிகளில் திமுக களமிறங்கும் என தெரிகிறது..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஒரே நேரத்தில் பல பெண்களுடன் தொடர்பு.. இன்ஸ்டாகிராமால் சிக்கிய மன்மதன்..!