1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. CM Vijay Expresses Grief Over Karur Tragedy and Criticizes Security Lapse

இனி தமிழகத்தின் நிரந்தர முதல்வர் விஜய் தான்.. கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு...

விஜய்
கரூரில் நடந்த துயரச் சம்பவம் தனது வாழ்க்கையில் மிகப்பெரிய வலியையும் காயத்தையும் ஏற்படுத்தியதாக முதலமைச்சர் விஜய் மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டார். 
 
பெரம்பலூர் கூட்டத்தின் போது பாதுகாப்பு குறித்து எச்சரித்த காவல்துறை, கரூரில் ஏன் அதேபோல் எச்சரிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய அவர், காவல்துறை நினைத்திருந்தால் அங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தவிர்த்திருக்க முடியும் என்று குற்றம் சாட்டினார். 
 
கடவுள் போன்ற பச்சை குழந்தைகளை அந்த நெரிசலில் இழந்ததாக குறிப்பிட்ட அவர், தன் சகோதர சகோதரிகளை இழந்த அந்த தருணத்தில் தான் ஓடி ஒளிந்துவிட்டதாக தன்னை ஏளனமாக விமர்சிப்பதைக்கண்டு வருத்தமடைந்தார்.
 
இதே கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசுகையில், திமுக ஆட்சியில் திமுகவினருக்கு மட்டுமே விடியல் கிடைத்ததாகவும், தமிழகத்தில் இனி எப்போதும் விஜய் ஆட்சிதான் அமையும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக விஜய் மட்டுமே இருப்பார் என்று அவர் புகழாரம் சூட்டினார். 
 
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை சட்டை செய்யாமல், பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று முதலமைச்சர் பேசியது அங்கிருந்த தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பணமா? ஜனமா? தில்லா சொல்றேன் கெத்தா சொல்றேன்.. என் ஜனம் தான் டா எனக்கு முக்கியம்.. ஆவேசமாக பேசிய முதலமைச்சர் விஜய்