1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. o panneer selvam may join in dmk soon

திமுக கூட்டணியில் இணையும் ஓபிஎஸ்?!.. கூட்டணி தலைவர்களே சொல்லிட்டாங்க!...

ops
அதிமுகவில் பல வருடங்கள் இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவின் மூத்த தலைவராக பார்க்கப்பட்டவர். அதிமுக ஆட்சி காலத்தில் மூன்று முறை தமிழக முதல்வராகவும் இருந்திருக்கிறார்.. ஆனால் தற்போது அவரின் நிலை அதற்கு தலைகீழாக மாறியிருக்கிறது.

ஏனெனில் அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட அவர் இல்லை. அவரை கட்சியிலிருந்து தூக்கி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. பாஜகவின் உதவியுடன் எப்படியாவது அதிமுகவில் இணைந்து விட பல முயற்சிகளையும் எடுத்தார் ஓபிஎஸ். ஆனால் அதற்கு பழனிச்சாமி இடம் கொடுக்கவில்லை..

சரி, தேசிய ஜனநாயக கூட்டணியிலாவது இணைந்துவிடலாம் என முயற்சி செய்தார். அதையும் பழனிச்சாமி தடுத்து விட்டார். எனவே பழனிச்சாமியின் மீதிருந்த கோபத்தில்தான் ‘திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும்.. கடந்த ஐந்து வருடங்களில் திமுக சிறப்பாக ஆட்சி செய்திருக்கிறது’ என நேற்று செய்தியாளர்களிடம் பேசினார் ஓ பன்னீர்செல்வம். ஒருபக்கம் தனது மகன் ரவீந்திரனை அழைத்துக்கொண்டு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சந்தித்தும் பேசியிருந்தார்..

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைவதற்கு வாய்ப்பிருப்பதாக மதிமுக தலைவர் வைகோ மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகிய இருவரும் கூறியிருக்கிறார்கள்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
கொடுத்தா அது திமுக.. புடுங்குனா அது பாஜக!.. முக ஸ்டாலின் ராக்ஸ்!...