திமுக இப்போ ஓவர் லக்கேஜ்.. வண்டி ஓடாது!.. கலாய்க்கும் கடம்பூர் ராஜூ..
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் திமுக தனது கூட்டணியை பலப்படுத்தி கொண்டே வருகிறது. ஏற்கனவே இந்த கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தை, மதிமுக, மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகள் இருக்கும் நிலையில் சமீபத்தில் தேமுதிகவும் திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது..
தேமுதிகவை எப்படியாவது தங்களின் கூட்டணிக்கு கொண்டுவர அதிமுக முயற்சிகள் செய்தது.. ஆனால் 20 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் என பிரேமலதா கேட்டதால் அதை அதிமுக ஏற்கவில்லை. ஆனால் 10 தொகுதி ஒரு ராஜ்யசபா சீட் என சொல்லி தேமுதிகவை கூட்டணியில் இணைத்திருக்கிறது திமுக என்கிறார்கள்.
ஒருபக்கம் அதிமுகவில் மூன்று முறை முதல்வராக இருந்தவரும், எடப்பாடி பழனிச்சாமியால் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டவருமான ஓ பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது தமிழகத்தில் மீண்டும் திமுகவே ஆட்சி அமைக்கும்.. 5 வருடத்தில் திமுக நிறைய சாதனைகளை செய்திருக்கிறது என்று கூறியிருந்தார். மேலும் 5 வருடத்தை சிறப்பாக ஆட்சி செய்தற்காக முக ஸ்டாலினுக்கு அவர் வாழ்த்தும் தெரிவித்தார்.. இது அதிமுக தரப்பினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் இதுபற்றி கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவரின் ஆன்மாவும் ஒரு காலமும் பன்னீர் செல்வத்தை மன்னிக்காது.. அதற்காக நிச்சயமாக அவருக்கு தண்டனை உண்டு.. தவெகவை பார்த்து திமுக பயப்படுகிறது.. அதனால்தான் இருக்கிற கட்சி.. போன கட்சி. வந்த கட்சி. என என்னென்ன இருக்கிறதோ எல்லாவற்றையும் சேர்த்து திமுக ஓவர் லக்கேஜ் ஆக மாறிவிட்டது.. ஓவர் லக்கேஜ் வண்டி ஓடாது என கலாய்த்திருக்கிறார்.