கடுமையான வெயில்!.. ஜெர்மனியில் 5120 பேர் பலி!..
எல் நினோ காரணமாக பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலும் கடந்த பல நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதுவரை குளுரில் மட்டுமே வாழ்ந்து வந்த அந்நாட்டு மக்கள் வெயிலை தாங்க முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்..
இத்தனைக்கும் அங்கு அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸகவே இருக்கிறது. ஆனாலும் வெயிலை தாங்கக்கூடிய வீடுகளோ காற்றோட்டமோ அந்த நாடுகளில் இல்லை என்பதால் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதுவரை பலரும் இறந்தும் போயிருக்கிறார்கள்.. எனவே அரசு சார்பில் சாலைகளில் வாகனங்கள் மூலம் மக்களின் மீது தண்ணீரும் தெளிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக ஜெர்மனியில் வரலாறு காணாத வெப்பம் நிலவி வருகிறது. ஜெர்மனி நாட்டில் நடப்பாண்டில் வெப்ப அலை காரணமாக இதுவரை 5120 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலான மரணங்கள் ஜூன் மாதம் இறுதியில் பதிவாகியிருக்கிறது. அதில் 75 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களே அதிகம் என சொல்லப்படுகிறது.
ஜெர்மனியில் மட்டுமல்லாமல் பல ஐரோப்பிய நாடுகளிலும் வெயில் காரணமாக 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அதிகமாக மரணமடைந்துவிட்டனர்.