தொடர்புடைய செய்திகள்
- மக்களுடன்தான் கூட்டணி!. தவெக தலைமையில் ஆட்சி!.. தெறிக்கவிட்ட விஜய்...
- டபரா செட் போய் நெக்ஸ்ட் பூஸ்ட் பாட்டில்!.. தவெகவை ட்ரோல் பண்ணும் திமுகவினர்...
- ரஜினி ஒரு வார்த்தை சொன்னா நீங்க டெபாசிட் காலி!.. தவெகவை பொளக்கும் பிரவீன் காந்தி...
- அரசு பள்ளிகளில் விஜய் பாடலுக்கு தடை!... பின்னணி இதுதான்!..
- ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல்!.. சென்சார் போர்ட் வச்ச அடுத்த செக்!..
கரூரில் ஜனநாயகன் ஷூட்டிங் நடந்ததா?!.. வெளியான போட்டோ!.. உண்மை என்ன?...
தவெக தலைவர் விஜய் கடந்த வருடம் செப்டம்பர் 27ம் தேதி நாமக்கல்,கரூர் போன்ற ஊர்களில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். நாமக்கல்லில் காலை 8.30 மணிக்கும், கரூரில் மதியம் 12.30 மணிக்கும் விஜய் வருவதாக அறிவிக்கப்பட்டு அவரை பார்க்க மக்களும் கூடியிருந்தனர். ஆனால், விஜய் நாமக்கலுக்கு மதியம் 2 மணிக்குதான் சென்றார். அதேபோல், கரூருக்கு இரவு 7 மணிக்குதான் சென்றார். அப்போது அங்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காத்திருந்தனர்.
விஜய் வேனின் மீது நின்று பேசிக்கொண்டிருந்தபோது மக்கள் கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு கீழே விழுந்து பலரும் மயக்கமடைந்தனர். அதில் பலரும் அங்கேயே உயிரிழந்தனர். அப்போது விஜய் அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்னை சென்றுவிட்டார். மருத்துவமனையில் 41 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பான விசாரணை சிபிஐ கைக்கு சென்றது. ஏற்கனவே கரூர் போலீஸ் அதிகாரிகள், தவெக நிர்வாகிகள் மற்றும் விஜயிடமும் மூன்று முறை சிபிஐ விசாரணை நடத்தியது. 3 முறையும் விஜய் டெல்லி சென்று விசாரணையில் கலந்துகொண்டார்.
இந்நிலையில்தான், கரூரில் மக்கள் கூடிய கூட்டத்தை விஜய் நடித்து வந்த ஜனநாயகன் படத்தில் பயன்படுத்துவதற்காக சினிமா கேமராக்களை வைத்து படக்குழு படம் பிடித்ததாக திமுகவினர் பலரும் டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் ஆதாரத்துடன் பதிவிட்டு வருகிறார்கள். சிலரோ அது சினிமா கேமரா இல்லை என்கிறார்கள், விஜய் ரசிகர்களும், தவெக ஆதரவாளர்களும் இது நாமக்கல்லில் விஜய் சென்றபோது எடுக்கப்பட்டது என சொல்கிறார்கள். ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை தவெக ஏற்கனவே மறுத்தது குறிப்பிடத்தக்கது.