1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tvk freegift video going viral and trolled

டபரா செட் போய் நெக்ஸ்ட் பூஸ்ட் பாட்டில்!.. தவெகவை ட்ரோல் பண்ணும் திமுகவினர்...

arunraj
தேர்தல் வரும்போது வாக்காளர்களுக்கு ஓட்டு போடுவதற்காக பணம் கொடுப்பது, பரிசு பொருட்கள் கொடுப்பது என்பது பல வருடமாகவே நடைமுறையில் இருக்கிறது
. ஓட்டை விற்காதீர்கள், ஓட்டு விற்பனைக்கு அல்ல என தேர்தல் ஆணையம் பல விழிப்புணர்வு பிரச்சனைகளை செய்தும் மக்களிடமும் மாற்றம் வரவில்லை.. அரசியல் கட்சிகளும் மாறவில்லை.. எப்படியாவது எதையாவது கொடுத்து மக்களிடம் வாக்குகளை வாங்கி விட வேண்டும் என்றுதான் அரசியல் கட்சிகள் நினைக்கிறது.

இப்போதெல்லாம் தேர்தலில் ஓட்டு போட 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை கூட கொடுக்கிறார்கள். சில இடங்களில் சொல்லியபடி பணம் கொடுக்கவில்லை என வாக்காளர்கள் அரசியல் கட்சியினரிடம் சண்டை போடும் நிலைக்குப் போயிருக்கிறார்கள். அந்த அளவுக்கு நாடு குட்டிச்சுவராய் போய்விட்டது.

தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 23ம் தேதி தமிழகத்தில் நடைபெறவுள்ளது. வழக்கம் போல் அரசியல் கட்சிகள் மக்களிடம் எதைக் கொடுத்து வாக்குகளை வாங்கலாம் என திட்டம் போட்டு வருகிறார்கள்.. தேர்தல் ஆணையம் ஒரு பக்கம் பறந்து பறந்து பரிசு பொருட்களையும், பணத்தையும் பறிமுதல் செய்தாலும் அவர்களை ஏமாற்றி பல வழிகளிலும் மக்களிடம் பணம் மற்றும் பரிசு பொருளை அரசியல் கட்சிகள் கொடுக்க முயற்சி செய்து வருகிறது..

இந்நிலையில்தான், தமிழக அரசியலில் புதிய தாக்கத்தை உருவாக்கப் போகிறார் என மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகமும் மக்களிடம் வாக்குகளை வாங்குவதற்காக பரிசு பொருட்களை கொடுக்கும் நிலைக்கு போயிருக்கிறது.

தவெகவின் முக்கிய நிர்வாகியும், திருச்செங்கோடு தொகுதியின் வேட்பாளருமான அருண்ராஜின் புகைப்படத்துடன் கூடிய டப்ரா செட்டுகள் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போதுஅருண்ராஜ் மற்றும் விஜயின் உருவப்படத்துடன் பூஸ்ட் பாட்டில்கள் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை திமுகவினர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து தவெகவை ட்ரோல் செய்து வருகிறார்கள்.


அடுத்த கட்டுரையில்
தேர்தல் நடத்தை விதிகள் அமூல்!.. மூன்று நாட்களில் 42.65 கோடி பறிமுதல்!..