தொடர்புடைய செய்திகள்
- திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடமா? அதிர்ச்சி தகவல்
- ஐபிஎல் போட்டி துபாயில் நடத்தப்படுகிறதா? பரபரப்பு தகவல்
- தமிழகத்தில் அக்டோபரில் அதிகரிக்கும் கொரோனா! – எம்.ஜி.ஆர் பல்கலைகழகம் தகவல்!
- திமுக எம் எல் ஏவுக்கு உதவத் தயார்! அரசு அதிகாரி உறுதி!
- புதிய வகுப்பறை கட்டிடம் 2 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா- எம்.ஆர். விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்
திமுக எம்.ல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம்: தொண்டர்கள் மகிழ்ச்சி
சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் அவர்கள் கடந்த 2ம் தேதியன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில் அவர் 80% வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜெ.அன்பழகன் அவர்களுக்கு கல்லீரல் பிரச்ச்னையும் இருப்பதால் அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து இருந்தன. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் திமுக எம்.ல்.ஏ ஜெ.அன்பழகன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நேற்று அவர் சுவாசிக்க செயற்கை சுவாசம் 80 % தேவைப்பட்ட நிலையில், இப்போது 67 % போதுமானதாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் அவர்கள் உடல்நிலை முன்னேறி வருவதை அறிந்த திமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று தொண்டர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
