தொடர்புடைய செய்திகள்
- சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலையா? அதிர்ச்சி தகவல்கள்
- ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா: கிராமமே தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு!
- மத்திய பாதுகாப்புத் துறை செயலாளருக்கு கொரோனாவா? பரபரப்பு தகவல்
- ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கு மீண்டும் அனுமதி! உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!
- தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15-ம் தேதி வரை அவகாசம்!
திமுக எம் எல் ஏவுக்கு உதவத் தயார்! அரசு அதிகாரி உறுதி!
திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகனுக்குக் கொரோனா ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய அரசு தயாராக இருப்பதாக சென்னை மண்டல சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திமுக கட்சியின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான கெ.அன்பழகன், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிவந்தார். மேலும் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு அவர் சிறப்பு நலத்திட்ட உதவிகளையும் செய்து வந்தார். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அவரது வீட்டில் தம்பி மற்று அவரது மனைவிக்கு கொரோனா இருந்த நிலையில் இப்போது அவருக்கும் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி சிறப்பு அதிகாரியான ராதாகிருஷ்ணன் அன்பழகன் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை நிர்வாகத்திடம் அவரது உடல்நிலை குறித்து பேசியுள்ளார். மேலும் அவரது சிகிச்சைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
