புதிய வகுப்பறை கட்டிடம் 2 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா- எம்.ஆர். விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்

karur
anandakumar| Last Modified புதன், 3 ஜூன் 2020 (23:28 IST)

கரூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் 2 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழா
பூமி பூஜை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.கரூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி புதிய வகுப்பறை கட்டிடம் கரூர் டெக்ஸ் சிட்டி ரோட்டரி சங்கம், கரூர் வைசியா வங்கி உதவியுடன் இணைந்து புதிய வகுப்பறை கட்டிடம் 2 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜை நிகழ்ச்சியினை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது மேலும் இந்நிகழ்ச்சியில் அன்பழகன் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கீதா மணிவண்ணன் மற்றும் நகராட்சி ஆணையர் சுதா, நடராஜன், கோபால கிருஷ்ணன், சூரிய நாராயணன், தியாகேஸ்வரன் மற்றும் டெக் சிட்டி ரோட்டரி சங்க நிர்வாகிகள் வைஸ்யா வங்கியின் அலுவலர்கள் என இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.இதில் மேலும் படிக்கவும் :