புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 4 ஜூன் 2020 (17:52 IST)

ஐபிஎல் போட்டி துபாயில் நடத்தப்படுகிறதா? பரபரப்பு தகவல்

ஐபிஎல் போட்டி துபாயில் நடத்தப்படுகிறதா?
2020 ஆம் ஆண்டு நடத்தவேண்டிய ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டது. இந்த போட்டிகள் இந்தியாவில் நடத்த இனி வாய்ப்பே இல்லை என்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் ஒரு சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவு தளர்வு ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக துபாயில் தியேட்டர்கள் திறப்பது உள்பட பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது 
 
ஏற்கனவே கடந்த 2009ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவிலும் 2014ஆம் ஆண்டு ஐக்கிய அரபு நாடுகளிலும் ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்த வாய்ப்பு இல்லை என்பதால் துபாய், ஐக்கிய அரபு நாடுகளில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை இந்த முயற்சி கைவிடப்பட்டால், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது