1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmk meeting started in anna arivalayam today

அண்ணா அறிவாலயத்தில் திமுக செயற்குழு கூட்டம்!.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?..

mk stalin
2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியும் நாம்தான் வெற்றி பெறுவோம் என திமுக நினைத்திருந்த நிலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முக்கியமாக முஸ்லீம், கிறிஸ்துவர்கள் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகளையும் விஜய் வாங்கிவிட்டதால்தான் திமுக தோல்வி அடைந்தது.

ஒருபக்கம், தவெக ஆட்சியமைக்க திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் கட்சிகள் விஜய்க்கு ஆதரவு கொடுத்தன. அதனால், கம்யூனிஸ்ட் தவிர மற்றவர்களுக்கு அமைச்சரவையிலும் விஜய் பங்கு கொடுத்துவிட்டார். கம்யூனிஸ்ட் அமைச்சரவையில் இடம் பெற மறுத்துவிட்டது. தவெகவில் தற்போது வன்னியரசோடு சேர்து 8 அமைச்சர்கள் பட்டியலனத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறர்கள். பல வருடங்களாக ஓட்டுக்காக மட்டுமே கூட்டணி கட்சிகளை பயன்படுத்தி வந்த திமுகவுக்கு இது பேரிடியாக அமைந்துவிட்டது. அதோடு, இனிமேல் தவெக கூட்டணியில் விசிக தொடரும் என திருமாவளவனும் அறிவித்துவிட்டார்.

இந்நிலையில்தன, திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியிருக்கிறது. தற்போது திமுகவில் உள்ள 78 மாவட்ட செயலாளர்களில் 3 பேர் மட்டுமே பட்டியலினத்தவர்கள். திமுகவில் சுமார் 20 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இனத்தவர்களாக இருந்திருக்க வேண்டும் ஆனால் அப்படி இல்லை. எனவே,  மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தி அதில் பட்டியலினத்தை சேர்ந்த சிலரை திமுக சேர்க்கும் எனத்தெரிகிறது.

இந்த கூட்டத்தில் சுமார் 800 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் கட்சியில் அமைப்பு ரீதியாக மாற்றங்களை செய்ய அவர்கள் வலியுறுத்துவார்கள் என தெரிகிறது.
2026 சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் முதல் முறையாக திமுக செயற்குழு கூட்டம் தற்போது தொடங்கியிருக்கிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
கைதியுடன் வீடியோ கால்!.. ஆடையை கழட்டும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்!..