1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. dmdk party not in india alliance for some reason

அதிமுக - பாஜக கூட்டணியில் மிஸ்ஸிங்!.. தவெகவுடன் இணைகிறதா தேமுதிக?...

dmdk
மறைந்த நடிகர் விஜயகாந்தால் துவங்கப்பட்டது தேமுதிக. விஜயகாந்த் இருந்தவரை அந்த கட்சி உயிர்ப்போடு இருந்தது. தமிழகத்தில் 8 சதவீத வாக்குகள் வரை தேமுதிக பெற்றது.
முதல் தேர்தலிலேயே விஜயகாந்த் வெற்றி பெற்றார். அதன்பின் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு நிறைய எம்எல்ஏக்களை பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் மாறினார்.

ஆனால் தற்போது விஜயகாந்த் இல்லாத நிலையில் தேமுதிகவை அவரின் மனைவி பிரேமலதா வழி நடத்தி வருகிறார். கடந்த சில தேர்தல்களில் அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்தே தேமுதிக தேர்தலை சந்தித்தது. எனவே 2026 சட்டமன்ற தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இணைத்து விட வேண்டும் என அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் முயற்சி செய்தன.

ஆனால், என்ன காரணத்தினாலோ தேமுதிக இதுவரை பிடிகொடுக்கவில்லை. எப்படியும் தேமுதிக இந்த கூட்டணிகு வந்துவிடும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். இந்நிலையில்தான் சென்னையை அடுத்துள்ள மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று நடக்கும் மாபெரும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் எல்லோரையும் மேடை ஏற்றி விட வேண்டும் என ஏற்கனவே வேலைகள் நடந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பல கட்சிகளும் இணைந்திருக்கிறது. அன்புமணி பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம், புதிய நீதி கட்சி போன்ற கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருக்கிறது.

ஆனால் தேமுதிக இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமா என்பது தெரியவில்லை. அப்படி எனில் தேசிய ஜனநாயக கூட்டணி தேமுதிக இல்லையா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. அதிமுகவை விட்டால் திமுக அல்லது தவெகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும். எனவே தேமுதிக திமுகவோடு செல்கிறதா இல்லை விஜயின் தவெகவுடன் சொல்கிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அடுத்த கட்டுரையில்
தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3,600 கூடியது! வெள்ளி ஒரே நாளில் ரூ.20,000 உயர்வு..!