1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 ஜனவரி 2026 (10:05 IST)

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3,600 கூடியது! வெள்ளி ஒரே நாளில் ரூ.20,000 உயர்வு..!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 3,600 கூடியது! வெள்ளி ஒரே நாளில் ரூ.20,000 உயர்வு..!
தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று இதுவரை கண்டிராத ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 
 
இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,600 அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 14,650-க்கும், ஒரு சவரன் ரூ. 1,17,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
24 காரட் சுத்த தங்கத்தின் விலையும் விண்ணைத் தொட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ. 15,982-க்கும், 8 கிராம் (ஒரு சவரன்) தங்கம் ரூ. 1,27,856-க்கும் விற்பனையாகிறது. 
 
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் மிரட்டும் வகையில் உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் ரூ. 360-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 3,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளிக்கு இன்று ஒரே நாளில் ரூ. 20,000 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 
வரும் நாட்களில் விலை இன்னும் அதிகரிக்கக்கூடும் என நிபுணர்கள் கணிப்பதால், நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் மிகுந்த தயக்கத்துடன் காணப்படுகின்றனர்.
 
Edited by Siva