தொடர்புடைய செய்திகள்
- சேப்பாக்கத்தில் நிற்க சொன்ன சீமான்! மறுத்த மன்சூர் அலிகான்? – சீமான் விளக்கம்
- கொரோனா எதிரொலி; கொடைக்கானலில் கட்டுப்பாடு! – திரும்பி செல்லும் பயணிகள்!
- சக்ரா திரைப்படம் சம்பாதித்த லாபம் எவ்வளவு தெரியுமா? கடுப்பில் விஷால்!
- மன்னார்குடியில் பள்ளி மாணவிகள் 11 பேருக்கு கொரோனா! – மக்கள் அதிர்ச்சி!
- ஸ்டாலினுக்கு எதிரா போட்டியிடாததற்கு இதான் காரணம்!? – சீமான் விளக்கம்!
எவ்ளோ தொகுதி வேணும்.. நம்மகிட்ட வாங்க! – தேமுதிக – அமமுக பேச்சுவார்த்தை!?
அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிக தற்போது அமமுகவுடன் கூட்டணி அமைக்க பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவுடன் தேமுதிக மூன்று கட்டமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்தது.
இந்நிலையில் தேமுதிக வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்குமா அல்லது தனித்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தேமுதிகவை மக்கள் நீதி மய்யம் பொன்ராஜ் கூட்டணிக்கு அழைப்பு விடுப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அமமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வேட்பு மனு தாக்கல் தொடங்க ஒரு வார கால அவகாசமே உள்ளதால் கூட்டணி குறித்த முடிவுகள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
