வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 10 மார்ச் 2021 (12:23 IST)

உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய முதல்வரை அறிவித்த பாஜக தலைமை!

உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய முதல்வரை அறிவித்த பாஜக தலைமை!
உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் திரிவேந்திரசிங் ராவத் திடீரென நேற்று ராஜினாமா செய்த நிலையில் அவருக்கு பதிலாக புதிய முதலமைச்சராக தீரத்சிங் ராவத் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் 
 
உத்தரகாண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திரசிங் என்பவர் நேற்று பதவியை திடீரென ராஜினாமா செய்தார். பாஜக தலைமையின் கட்டாயத்தினால் தான் ராஜினாமா செய்ததாகவும் அவர் கூறினார் 
 
மாநில பாஜக அவர் மீது அதிருப்தி தெரிவித்ததை அடுத்து அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய முதல்வரை தேர்வு செய்துள்ளதாக பாஜக எம்எல்ஏ கூட்டம் இன்று நடைபெற்றது. இன்று காலை நடைபெற்ற இந்த கூட்டத்தில் புதிய முதல்வராக தீரத்சிங் ராவத் தேர்வு செய்யப்பட்டார். அவர் விரைவில் உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
உத்தரகாண்ட் மாநில முதல்வர் ராஜினாமா செய்தது பாஜக அரசின் தோல்வியையே காட்டுவதாகவும் தோல்வியை மறைப்பதற்காக தான் பாஜக கண்துடைப்பு நடவடிக்கையாக முதல்வரை மாற்றியுள்ளது என்றும் காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது