1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Seeman explain why mansoor left NTK

சேப்பாக்கத்தில் நிற்க சொன்ன சீமான்! மறுத்த மன்சூர் அலிகான்? – சீமான் விளக்கம்

Tamilnadu
நாம் தமிழர் கட்சியில் தொகுதி வழங்கவில்லை என மன்சூர் அலிக்கான் கட்சியிலிருந்து விலகியது குறித்து சீமான் விளக்கமளித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் தனக்கு தொகுதி வழங்கவில்லை என நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி ”தமிழ் தேசிய புலிகள் கட்சி” என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சி பேட்டியில் பதிலளித்த சீமான், மன்சூர் அலிகான் புதுக்கோட்டை தொகுதி கேட்டதாகவும், ஆனால் அதற்கு ஏற்கனவே வேறு வேட்பாளர் அறிவிக்கப்பட்டதால் சேப்பாக்கத்தில் போட்டியிட வாய்ப்பளித்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அந்த வாய்ப்பை மறுத்த மன்சூர் அலிகான் புதிய கட்சி தொடங்கிவிட்டு சீட் வழங்கவில்லை என கூறுவதாகவும் சீமான் விளக்கமளித்துள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய முதல்வரை அறிவித்த பாஜக தலைமை!