தொடர்புடைய செய்திகள்
- பேஷியல் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் !!
- சருமத்திற்கு ஆரோக்கியம் தரும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!
- பவளமல்லியில் இத்தனை மருத்துவ குணங்கள்
- இளவரசர் ஹாரி - சீமாட்டி மேகன் அதிர்ச்சிப் பேட்டி: அரசு குடும்பம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் - முழு விவரம்
- அஜித்தைப் பற்றி தாமதமாகத் தெரிந்துகொண்டேன் - விவேக் டுவீட்
ஸ்டாலினுக்கு எதிரா போட்டியிடாததற்கு இதான் காரணம்!? – சீமான் விளக்கம்!
தமிழக சட்டமன்ற தேர்தலில் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடும் சீமான், மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடாததன் காரணத்தை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் அனைத்து தொகுதிக்குமான வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் முன்னதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்த தொகுதியில் எதிர்த்து போட்டியிடுவதாக சவால் விட்டிருந்தார்.
இந்நிலையில் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சீமான் திருவொற்றியூரில் போட்டியிடுவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள சீமான் “அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து போராட வேண்டியிருப்பதால் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறேன்” என கூறியுள்ளார்.
