தொடர்புடைய செய்திகள்
- ரிசல்ட் இதுதான்!.. தேர்தலுக்கு பிறகு பாஜக காலில் திமுக விழும்!.. விஜய் கணிப்பு...
- 10 முறை தோத்த பழனிச்சாமி என்னை கலாய்க்கிறார்!.. விஜய் நக்கல்!..
- மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம்.. ஸ்டாலின் சார் ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க!.. விஜய் பிரச்சாரம்..
- உங்க மேல தப்பில்லன்னா செந்தில்பாலாஜியை ஏன் கோவைக்கு அனுப்புனீங்க!?.. விஜய் கேள்வி!..
- போலீஸ் சொன்ன நேரத்தில் நான் கரூரில் இருந்தேன்!.. விஜய் ஆவேசம்!..
முதல்ல உங்க புள்ளைக்கு சொல்லிகொடுங்க!. அப்புறம் முட்டு கொடுங்க!.. எஸ்.ஏ.சி-க்கு கிளாஸ் எடுத்த சேரன்!...
நாளைய தீர்ப்பு மூலம் தனது மகன் விஜயை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். பல வருடங்கள் உழைத்து சரியாக திட்டமிட்டு விஜயை முன்னணி நடிகர்களில் ஒருவராக எஸ்.ஏ.சி மாற்றினார். ஒரு கட்டத்தில் விஜயின் ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி விஜயை அரசியல் நோக்கி இழுத்து வந்ததும் எஸ்.ஏ.சந்திரசேகர்தான்.
முதன் முதலில் விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் ஒரு அரசியல் கட்சியையும் அவர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். இப்போது விஜய் அரசியலுக்கு வந்து ஒரு முக்கிய இடத்தை பிடித்திருக்கும் நிலையில் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார் சந்திரசேகர். சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட விஜய்க்கு ஆதரவாக பல கருத்துக்களையும் தெரிவித்திருந்தார். . இந்நிலையில், இதை விமர்சித்திருக்கும் இயக்குனர் சேரன் தனது டிவிட்டர் தள பக்கத்தில் கீழ்கண்டவாறு பதிவிட்டு இருக்கிறார்:
சட்டம் ஒரு இருட்டறை, நீதிக்கு தண்டனை, நான் சிகப்பு மனிதன் போன்ற அரசியல் விழிப்புணர்வு படங்களை மக்களுக்கு தந்த அய்யா எஸ்.ஏசந்திரசேகர் இப்போது தனது பிள்ளையை காப்பாற்ற களத்தில் திடீரென பேட்டிகள் அளிக்கிறார்.. பெரும் அரசியல் பார்வை உள்ள ஒரு மனிதர் தனது மகனின் அரசியலில் தெளிவும், உழைப்பும், தொலைநோக்கு சிந்தனையும் இல்லை என தெரிந்தும் அவரை அரசியலில் உயர்த்த நினைப்பது, தமிழ்நாட்டின் வளர்ச்சியை தடுப்பது போன்றதாகும்..
அடுத்த தலைமுறை இளைஞர்களை அவர்களுக்கான அரசியல் புரிதலை உள்வாங்கி கற்றுக்கொடுக்காமல் வெறும் கூட்டம் காண்பிக்க பயன்படுத்தி பலனடைய நினைப்பது சரியா என யோசிக்காமல் தனது பிள்ளை என்பதால் இவரைப்போன்ற பெரும் முதிர்ச்சியானவர்கள் விஜயை காப்பாற்ற அரசியலில் உக்கமளித்து செயல்படுவது வருத்தமளிக்கிறது..
கற்றுக்கொடுங்கள் முதலில்.. தயாராக்குங்கள் அவரையும் அவர் ரசிகர்களையும்.. பின்னர் எல்லோருக்கும் நாம் தேவையா என அவரே முடிவு செய்வார்... நீங்கள் இந்த சமூகத்துக்கு எந்த தீங்கும் விளைந்துவிட கூடாது என்ற எண்ணத்தில்தான் இந்த பதிவு... அடுத்த தலைமுறையை ஆபத்தான இடத்திற்கு அழைத்து செல்கிறார்கள் இவர்கள்... எஸ்.ஏ.சி அய்யாவிற்கு அவரின் பிள்ளை முக்கியமெனில் நமக்கு நம் பிள்ளைகள் முக்கியம்... சிந்தியுங்கள் மக்களே என பதிவிட்டிருக்கிறார்.