1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Dinamalar explain about controversy news about breakfast scheme

2 பதிப்புகளில் மட்டும் தான் அந்த செய்தி வெளியாகியுள்ளது: தினமலர் விளக்கம்..!

தினமலர்
காலை உணவு திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய செய்தி தினமலரில் இன்று வெளியான நிலையில் அதற்கு தினமலர் விளக்கம் அளித்துள்ளது.  
 
திரு சத்தியமூர்த்தி என்பவரை ஆசிரியராகக் கொண்ட ஈரோடு மற்றும் சேலம் ஆகிய இரண்டு பதிப்புகளில் மட்டும் தான்  குறிப்பிட்ட அந்த செய்தி வெளியாகியுள்ளது என்றும் மற்ற பதிப்புகளில் அந்த செய்தி வெளியாகவில்லை என்றும் தினமலர் விளக்கம் அடைந்துள்ளது.
 
  கி ராமசுப்பு என்பவர் ஆசிரியராக கொண்ட தினமலர் சென்னை, கோவை, மதுரை, பாண்டிச்சேரி, திருநெல்வேலி, நாகர்கோவில் பதிப்புகளில் சர்ச்சைக்குரிய செய்தி வெளியாகவில்லை என்றும் தினமலர் விளக்கம் அளித்துள்ளது.  
 
மேலும் திரு R. சத்தியமூர்த்தி கடந்த  23 வருடங்களாக இந்த இரண்டு பதிப்புகளையும் தனியாக நடத்தி வருகிறார். இருப்பினும்  "தினமலர்" பெயரில் இப்படி ஒரு அருவருக்கத்தக்க, வெட்கி தலை குனியக் கூடிய செய்தி வெளியாகி இருப்பது மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிக்கிறது என்றும் தினமலரின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து... 64 பேர் உயிரிழப்பு