வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (15:20 IST)

காலை உணவு திட்டம் புதிய கல்வி திட்டத்தில் உள்ள திட்டம் தான்: ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்!

tamilisai
தமிழகத்தில் காலை உணவு திட்டம் சமீபத்தில் தொடங்கிய நிலையில் புதுவை மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் இதை வரவேற்றுள்ளார். 
 
புதுவையில் ஏற்கனவே பள்ளி குழந்தைகளுக்கு பால் கொடுக்கப்படுவதாகவும் அதை பின்பற்றி தான் தற்போது தமிழகத்தில் காலை உணவு திட்டம் நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். 
 
மேலும் புதிய கல்வி கொள்கை திட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையை பின்பற்றி தான் தமிழக அரசு காலை உணவு பள்ளி குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது என்பதும் புதிய கல்வித் திட்டத்தில் உள்ள ஒரு திட்டம்தான் இந்த காலை உணவு திட்டம் என்பதையும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran