வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (13:05 IST)

காலை உணவுத்திட்டம் செய்தி எதிரொலி.. தினமலர் விளம்பர பலகைகள் மட்டும் அகற்றமா?

தமிழக அரசின் காலை உணவு திட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இன்று தினமலரில் செய்தி வெளியாகிய நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் இது குறித்து கண்டனம் தெரிவித்திருந்தார்
 
 இந்த நிலையில் தற்போது சென்னையில் முக்கிய பகுதியில் உள்ள தினமலரின் விளம்பர பதாகைகள், அகற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
 
சமூக வலைதள பயனாளர்கள் சென்னை ஆயிரம் விளக்கு மற்றும் வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள சாலையோர பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த தினமலரின் விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டு வருவதாக புகைப்படங்களுடன் கூடிய பதிவை செய்துள்ளனர் 
 
இந்த பதிவுகள் தற்போது இணையதளத்தில் நகர வைரலாக வருகிறது.  தினமலர் விளம்பர பதாகைகள் மற்றும் அகற்றப்படுமா? அல்லது சாலையில் சாலையோர பூங்காவில் வைக்கப்பட்டிருந்த அனைத்து விளம்பர பதாகைகளும் அகற்றப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva