தொடர்புடைய செய்திகள்
- பாஜக கூட்டணி எந்த கட்சியோடும் இருக்கலாம்! – சூசகமாக பேசிய பொன்னார்!
- கடை ஊழியரை கொலை செய்த ஜோதிடர்? கோவில் வளாகத்தில் பிணம்! – கடலூரில் பரபரப்பு!
- ஸ்விகியில் சம்பளம் குறைச்சிட்டாங்க.. என்னனு கேளுங்க! – முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை!
- போலீஸை வெட்டிய ரவுடி; என்கவுண்ட்டர் செய்த போலீஸ்! – சென்னையில் பரபரப்பு!
- திமுகவும் அதிமுகவும் மக்களின் எதிரிகள்: காயத்ரி ரகுராம்
முதல்வரை பார்க்க சென்ற திமுக எம்.பி; தடுத்து நிறுத்திய போலீஸ்! – தருமபுரியில் பரபரப்பு
தருமபுரியில் அரசு விழாவிற்காக வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க திமுக எம்.பி செந்தில்குமாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நாமக்கலில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிலையில் தருமபுரியில் கொரோனா நடவடிக்கைகளை முதல்வர் கண்காணிக்க வந்த போது அம்மாவட்ட திமுக எம்.பி செந்தில்குமார் முதல்வரை சந்திக்க வந்துள்ளார்.
ஆனால் முதல்வரை சந்திக்க விடாமல் செந்தில்குமாரை போலீஸ் தடுத்ததால் அங்கு வாக்குவாதம் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வரும் நிலையில் எதிர்கட்சியினரை முதல்வரை சந்திக்க விடாமல் தடுப்பது குறித்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள அமைச்சர் சிவி சண்முகம் எதிர்கட்சியினரை முதல்வரை சந்திக்க விடாமல் தடுப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
