செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (11:18 IST)

சென்னை விமானங்களை தடை செய்ய இலங்கை அரசு ஆலோசனையா? பரபரப்பு தகவல்

சென்னையில் இருந்து கொழும்பு வரும் விமானங்களை தடை செய்ய இலங்கை அரசு ஆலோசனை செய்து வருவதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தாலும் இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 16 பேர் கொரோனா உறுதியானது 
 
இதனையடுத்து அந்த மூவரும் கொழும்பில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனை அடுத்து சென்னை உள்பட ஒருசில நகரங்களில் இருந்து வரும் விமான பயணிகளால் தான் இலங்கையில் அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவுவதாக இலங்கை அரசு கருதுகிறது 
 
எனவே முதல் கட்டமாக சென்னையில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்க இலங்கை அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இலங்கையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கி உள்ளது என்பதும் அங்கு 11 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது