வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (22:17 IST)

திமுகவும் அதிமுகவும் மக்களின் எதிரிகள்: காயத்ரி ரகுராம்

திமுகவும் அதிமுகவும் தமிழக இந்து மக்களின் எதிரி என்று நடிகையும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த சில நாட்களாகவே அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் மோதிக் கொள்கின்றனர் என்பதும் விநாயகர் சதுர்த்தி விஷயத்தில் இந்த மோதல் நடந்து கொண்டு இருக்கின்றது என்பதும் தெரிந்ததே 
 
ஏற்கனவே ஹெச் ராஜா உள்ளிட்ட பாஜகவினர் அதிமுக தலைவர்களை கடுமையாக விமர்சித்து வருவதும் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பாஜக தலைவர்களுக்கு பதிலடி கொடுத்து வருவது தெரிந்ததே
 
இந்த நிலையில் நடிகையும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் ’திமுக இந்து மக்களின் தெரிந்த எதிரி என்றால் அதிமுக இந்து மக்களின் மறைமுக எதிரி என்றும் இருவருமே தமிழக இந்து மக்களுக்கு ஒட்டுமொத்த எதிரிகள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
எனவே திமுக அதிமுக குறித்து மக்கள் விழிப்படைய வேண்டிய நேரம் இது தான் என்றும் அவர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது