எப்பவேனா இடைத்தேர்தல் வரும்!.. ரெடியா இருங்க!.. திமுகவினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்..
2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற ஆட்சி அமைத்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சராக இருந்தார். 2026 தேர்தலிலும் திமுகவே ஆட்சியமைக்கும் என முக ஸ்டாலின் நம்பியிருந்தார். ஆனால் புதிதாக கட்சி தொடங்கி தனித்து போட்டியிட்ட விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதோடு, திமுக கூட்டணியில் இருந்த அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைத்து விட்டது.
இப்படி ஒரு திருப்பம் வரும் திமுக எதிர்பார்க்கவில்லை. அதைவிட முக்கியமாக திமுக தலைவர் முக ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இது திமுகவினருக்கு அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. அதோடு தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு இடைத்தேர்தல்களிலும் திமுக தோற்றுப் போனது.
அடுத்து கரூர், பெருந்துறை, அம்பா சமுத்திரம், விராலிமலை, திருச்சி கிழக்கு ஆகிய ஐந்து தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் இந்த இடைத்தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக இன்று காலை சென்னை அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இது முக ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முக ஸ்டாலின் கரூர், பெருந்துறை, அம்பாசமுத்திரம், விராலிமலை, திருச்சி கிழக்கு ஆகிய 5 தொகுதிகளிலும் எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் வரலாம். எனவே, அதற்கான பணிகளை உடனே தொடங்குங்கள்.. தொகுதிக்கு நன்கு அறிமுகமான வேட்பாளர்களின் பெயர்களை தலைமைக்கு அனுப்பி வையுங்கள். இந்த 5 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும் என அவர் பேசியிருக்கிறார்.