1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. TV Actress Anandhi Ajay Heartbroken as Scenes Cut from Vijay's Jana Nayagan

ஜனநாயகன் படத்துல என் காட்சியை நீக்கிட்டாங்க.. கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகை...

தமிழ் சினிமா
தமிழ் சின்னத்திரை நடிகை ஆனந்தி அஜய், தமிழக முதல்வர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'ஜன நாயகன்' படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் விஜய்யுடன் நடிக்கும் தனது நீண்ட நாள் கனவு நனவாகியதாக அவர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த நிலையில், படம் வெளியானபோது தனது காட்சிகள் அனைத்தும் எடிட்டிங்கில் நீக்கப்பட்டதை கண்டு கண்ணீர் விட்டுள்ளார்.
 
ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இப்படத்தின் ரிலீசுக்காக காத்திருந்த அவர், திரையரங்கில் தனது முகத்தை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்ததை சமூக வலைதளத்தில் உணர்ச்சிகரமாக பகிர்ந்துள்ளார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால், அவருடன் திரையில் தோன்றும் வாய்ப்பை இழந்துவிட்டதாக கூறி அவர் வருந்திய வீடியோ தற்போது இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.
 
'கார்த்திகை பெண்கள்', 'கனா காணும் காலங்கள்' உள்ளிட்ட பல தொடர்களில் நடித்துள்ள ஆனந்தி, பரதநாட்டியக் கலைஞரும் கூட ஆவார். விஜய்யின் இறுதி படமான 'ஜன நாயகன்' எச். வினோத் இயக்கத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வரும் வேளையில், அவரது காட்சிகள் நீக்கப்பட்டது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருக்கு ஆறுதல் கூறி ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கூலி சாதனையை நெருங்க முடியாத ஜனநாயகன்