1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tourist placess will be closed because of rain

கனமழை எதிரொலி!.. கொடைக்கானல், நீலகிரி பக்கம் போகாதீங்க!..

kodaikanal
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது.

எனவே பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. அதோடு, பருவமழை தீவிரமடையும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது. இதன் காரணமாக மழை பெய்யும் மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு மக்கள் வருவது குறைந்துவிட்டது.

ஏற்கனவே கன்னியாகுமரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் உடனடியாக மூடுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கொடைக்கானல் மற்றும் தாண்டிக்குடி மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா வருவதை தவிர்க்க வேண்டும்.. மலைப் பாதைகளில் பயணிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

ஒருபக்கம் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டிருக்கிறது. மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா தளங்கள் மூடப்படுவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்திருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
எப்பவேனா இடைத்தேர்தல் வரும்!.. ரெடியா இருங்க!.. திமுகவினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்..