வியாழன், 12 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 11 பிப்ரவரி 2026 (21:39 IST)

விஜய் பாஜகவின் பி டீம்!.. திமுக எம்பி தயாநிதி மாறன் பேட்டி!..

vijay
நடிகர் விஜய் இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கினார். கட்சி தொடங்கியது முதலே திமுகவை மட்டுமே தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தார். சமீப காலமாகத்தான் அவர் அதிமுகவையும், பாஜகவையும் விமர்சிக்க துவங்கியிருக்கிறார்.. அதிமுகவை அடிமை ஊழல் கட்சி எனவும் திமுகவை தீய சக்தி எனவும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் விஜய்..

இதனால் தற்போது அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே விஜய்க்கு எதிராக களம் இறங்கி அவரை திட்டத் தொடங்கியுள்ளனர். ஒருபக்கம் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக தனது தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியிருக்கிறது. பல ஊர்களுக்கும் சென்று முதல்வர் ஸ்டாலின் மக்களிடமும், திமுக நிர்வாகிகளிடமும் பேசி வருகிறார்..

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி தயாநிதிமாறன் ‘விஜய் எனக்கு நல்ல நண்பர்தான்.. ஆனால் விஜய் தற்போது பாஜகவின் பி டீமாக இருக்கிறார்.. அவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு எது போலி? எது நிஜம்? என்பது தெரியும்’ என சொல்லியிருக்கிறார்..