1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. court order about vinayagar statue

சிலைகளை விற்க தடையில்லை.. ஆனால் ஆற்றில் கரைக்க கூடாது.. நீதிமன்றம் உத்தரவு

விநாயகர்
நெல்லை, பாளையங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக தயார் செய்யப்பட்டுள்ள சிலைகளை விற்க தடையில்லை என்றும், ஆனால் அதே நேரத்தில் 
பிளாஸ்டர் ஆப் பாரிஸில் தயாரிக்கப்பட்ட சிலைகள் இருந்தால் அவற்றில் ஆற்றில் கரைக்க கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
சிலைகளை விற்பனை செய்ய  பாளையங்கோட்டை வருவாய் துறையினர், போலீசார் தடை விதிக்க கூடாது என விநாயகர் சிலை தயாரிப்பாளர் பிரகாஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
 
சிலையை வாங்குபவர்களிடம், அதை ஆற்றில் கரைக்க மாட்டோம் என உறுதிமொழி வாங்கி விட்டு சிலைகளை விற்கலாம்  என்றும், தடை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை, உடனடியாக விற்க அனுமதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
சென்னையில் வெளுத்து வாங்கும் மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!