ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (17:13 IST)

ஒரு மாதத்தில் காலி செய்யுங்கள்: திமுக எம்பிக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்..!

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை ஒரு மாதத்தில் திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி காலி செய்ய வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
சமூகநீதி பாதுகாவலர்கள் எனக் கூறும் அரசியல் கட்சிகள், மக்கள் விருப்பத்துக்கு கௌரவம் வழங்க வேண்டும் என்றும், மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, ஒதுக்கப்பட்ட நிலத்தை ஒரு மாதத்தில் காலி செய்ய வேண்டும் என்றும், ஒரு மாதத்தில் காலி செய்து கொடுக்காவிட்டால், திமுக எம்.பியை அப்புறப்படுத்தி நிலத்தை மீட்க வேண்டும் என்றும்
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
 
முன்னதாக சென்னை கோயம்பேட்டில் கலாநிதிக்கு சொந்தமான 62.93 சதுர மீட்டர் நிலத்தை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தமிழக அரசு ஒதுக்கியது. இந்த நிலத்தை காலி செய்யும்படி 2011ல் அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்தும், நிலத்துக்கு உரிய இழப்பீடு கோரியும் கலாநிதி வீராசாமி தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran