வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 16 செப்டம்பர் 2023 (16:13 IST)

சென்னையில் வெளுத்து வாங்கும் மழை.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

சென்னையில் கடந்த சில மணி நேரங்களாக கரு மேகங்கள் சூழ்ந்த நிலையில் தற்போது பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்குவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் ஒரு வாரத்திற்கு மிதமான மழை முதல் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று திடீரென மதியம் மூன்று மணி அளவில் சென்னையின் பல பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்ததால் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது. ’
 
அதன்படி சற்று முன்னர் சென்னையில் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. சென்னை தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அண்ணா சாலை, நந்தனம், எழும்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் 
 
கனமழை காரணமாக சாலைகளில்  மழைநீர் தேங்கி இருக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் மெதுவாக செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
Edited by Mahendran