விநாயகர் சிலைகளை நீர் நிலையில் கரைப்பதற்கான வழிமுறைககள்: தமிழக அரசு அறிவிப்பு..!
வரும் திங்கட்கிழமை தமிழக முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
1. வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் மட்டுமே சிலைகளை தயாரிக்க வேண்டும்.
2. நீர் சார்ந்த மக்கக்கூடிய நச்சுக்கள் அற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
3. சிலைகளை மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்ட இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும்.
4.சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்
Edited by Siva