செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 16 செப்டம்பர் 2023 (15:32 IST)

S_S ராமசாமி_படையாட்சியார் சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மரியாதை

ramasamy pataiaachiyar
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் திரு. S_S_ராமசாமி_படையாட்சியார் அவர்களின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தன் சமூகவலைதள பக்கத்தில்,

’’தளபதி விஜய்அவர்களின் சொல்லுக்கிணங்க,

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் திரு. S_S_ராமசாமி_படையாட்சியார் அவர்களின் 106-வது பிறந்தநாளை முன்னிட்டு.!

• தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக,

கடலூர் மாவட்ட மஞ்சக்குப்பத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.!

இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட பொறுப்பாளர், மாவட்டத் தலைவர்கள், அணித் தலைவர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், நகரம், ஒன்றியம், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்’’என்று தெரிவித்துள்ளார்.