டீட்டா சரவணனை ரிமாண்ட் செய்ய நீதிமன்றம் மறுப்பு - கோட்டைவிட்ட தவெக...
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக பல நூறு கோடிகளை லஞ்சமாகப் பெற்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை கைது செய்து வாகனத்தில் ஏற்றிய போது அவரின் ஆதரவாளரும், வேலூர் திமுக கவுன்சிலருமான டீட்டா சரவணன் அவனை (முதல்வர் விஜய்) கரூரிலேயே போட்டிருந்தா இப்படியெல்லாம் நடந்திருக்குமா? என்று கத்தினார்..
இது தொடர்பான வீடியோ வெளியானதும் போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தேடினர். இதை தெரிந்து டீட்டா சரவணன் தலைமறைவானார். ஒருவழியாக அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால் அவரை ரிமாண்ட் செய்ய நீதிமன்றம் மறுத்துவிட்டது.. வழக்கு பதிவு செய்வதற்குரிய் உரிய முகாந்திரம் இல்லை எனக் கூறி சொந்த ஜாமினில் அவரை அம்பத்தூர் குற்றவியல் நீதிமன்றம் விடுவித்தது.

