1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. congress protest against perarivalan release

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து நாளை அறப்போராட்டம்: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

ks alagiri
பேரறிவாளன் விடுதலை எதிர்த்து நாளை அறப்போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்
 
 30 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின்னர் இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காரணமாக விடுதலையானார் 
 
இந்த நிலையில் அவரது விடுதலையை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்ற போதிலும் காங்கிரஸ் கட்சி மற்றும் தனது அதிருப்தியை தெரிவித்து வருகிறது 
 
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறியபோது பேரறிவாளன் விடுதலைக்கு எதிராக தமிழகத்தில் நாளை காங்கிரசார் போராட்டம் நடத்தும் என்றும் வெள்ளை துணியால் கட்டிக்கொண்டு நாளை காலை 10 மணி முதல் 11 மணி வரை போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 
அடுத்த கட்டுரையில்
ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த வெற்றி: ஓபிஎஸ்-ஈபிஎஸ்