தொடர்புடைய செய்திகள்
- சினிமா மெளனம் கலைக்குமா? Cannes விழாவில் உக்ரைன் அதிபர்!!
- கேன்ஸ் விழாவில் இந்திய கலைஞர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு… வைரல் புகைப்படங்கள்!
- செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை! – இந்திய செஸ் கூட்டமைப்பு!
- ஒகேனக்கலில் அதிகரித்த நீர்வரத்து; படகு சவாரி, குளிக்க தடை! – பயணிகள் ஏமாற்றம்!
- டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வு மே 21 தேதி நடைபெறும்!- தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு
உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது: கே.எஸ்.அழகிரி
உச்ச நீதிமன்றம் தான் பேரறிவாளன் உள்பட 7 பேரை கொலையாளிகள் என்று சொல்லி தண்டனை கொடுத்தது என்றும் தற்போது உச்ச நீதிமன்றமே சில சட்ட நுணுக்கங்களை சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர வலியுறுத்திய போது காங்கிரஸ் கட்சி மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது; அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
