திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 18 மே 2022 (14:35 IST)

நீதிக்கு இதுவொரு போராட்டம், இதை நிச்சயம் உலகம் பாராட்டும்: சத்யராஜ்

sathyaraj
நடிகர் சத்யராஜ் பேரறிவாளன் விடுதலை குறித்து நீதிக்கு இது ஒரு போராட்டம் நிச்சயம் உலகம் பாராட்டும் என்று கூறியுள்ளார்
 
பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அது குறித்து நடிகர் சத்யராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது: பேரறிவாளன் குடும்பத்தார் அனைவருக்கும் எனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொள்கிறேன் 
 
இந்த விடுதலைக்கு முக்கிய காரணமாக இருந்த தமிழக முதல்வர் தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மற்றும் பல வருடங்களாக நீதிக்காக போராடிய அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் தமிழ் உணர்வாளர்களுக்கும் தொடர்ந்து போராடிய வழக்கறிஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீதிக்கு இது ஒரு போராட்டம் நிச்சயம் இதை உலகம் பாராட்டும் என்று கூறியுள்ளார்