1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 18 மே 2022 (14:42 IST)

திமுக மகிழ்ச்சி, காங்கிரஸ் வருத்தம்: கூட்டணி இருக்குமா என காயத்ரி கேள்வி

Gayathri
பேரறிவாளன் விடுதலை விஷயத்தில் திமுக மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் வருத்தத்தில் இருப்பதாகவும் எனவே இந்த கூட்டணி நீடிக்குமா என்றும் பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் இருப்பதாவது:
 
இன்றைய முக்கிய செய்தி:- 
பேரைவாளன் விடுதலை குறித்து திமுக மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. 
பேரறிவாளன் விடுதலை குறித்து காங்கிரஸ் வருத்தத்தில் உள்ளது. 
காலம் மாறிவிட்டது, ஆதரவு மாறிவிட்டது, கூட்டணி இருக்குமா?
 
மேலும் சட்டத்தில் உள்ள ஓட்டைகள் குறித்து ஜெய்பீம் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் என்றும், அந்த வசனம் இதுதான் என்று காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்
 
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் ஒரு டயலாக்- நான் இந்த டயலாக்கை தோராயமாக சொல்கிறேன். “மிகவும் நல்ல சட்டம் உள்ளது, ஆனால் பல ஓட்டைகள் உள்ளன, சில குற்றவாளிகள் சட்டத்தின் ஓட்டைகளை மட்டுமே கற்றுக்கொண்டனர். அவர்கள் அதிலிருந்து வெளியே வருகிறார்கள்”. எனக்கு இந்த டயலாக் பிடிக்கும்