செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 18 மே 2022 (14:57 IST)

ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த வெற்றி: ஓபிஎஸ்-ஈபிஎஸ்

Ops  eps
பேரறிவாளனின் விடுதலை ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனைக்கு கிடைத்த வெற்றி என ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்
 
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து பேரறிவாளன் இன்று விடுதலை செய்யப்பட்டார். இதனை அடுத்து இது குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர் 
 
அந்த அறிக்கையில் பேரறிவாளன் விடுதலை ஜெயலலிதாவின் தொலைநோக்கு சிந்தனை கிடைத்த வெற்றி என்றும் அதிமுக அரசின் முயற்சிகளினால் பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது என்றும் எஞ்சிய ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது