செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 18 மே 2022 (14:29 IST)

பேரறிவாளனுக்கு கிடைத்த விடுதலை பயங்கரவாதத்துக்கு கிடைத்த வெற்றி: அமெரிக்கை நாராயணன்

americai nara
பேரறிவாளனுக்கு கிடைத்த விடுதலை பயங்கரவாதத்துக்கு கிடைத்த வெற்றி: அமெரிக்கை நாராயணன்
பேரறிவாளனுக்கு கிடைத்த விடுதலை பயங்கரவாதத்திற்கும் பணநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி என காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பேரறிவாளனின் விடுதலையை நாடே எதிர்பார்த்து காத்திருந்த போதிலும் காங்கிரஸ் கட்சி மட்டும் பேரறிவாளன் விடுதலைக்கு கடைசிவரை எதிர்ப்பு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே பேரறிவாளனை விடுதலை செய்ய தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தனது அதிருப்தியை தெரிவித்த நிலையில் தற்போது மற்றொரு முக்கிய காங்கிரஸ் பிரமுகர் அமெரிக்கை நாராயணன் இதுகுறித்து கூறிய போது ’பேரறிவாளனுக்கு கிடைத்த விடுதலை பயங்கரவாதத்திற்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார். அவரது இந்த கருத்து சர்ச்சைக்குரியதாக பார்க்கப்பட்டு வருகிறது