1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. congress has kept check to tvk vijay

செக் வைத்த காங்கிரஸ்!.. முதல்வர் ஆவாரா விஜய்?.. பரபர அரசியல் களம்!..

rahul vijay
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க எந்த கட்சி ஆதரவு தெரிவிக்க போகிறது என்பதுதான் அரசியல்வட்டாரத்தில் இப்போது முக்கிய கேள்வியாக மாறியிருக்கிறது. பொது மக்களிடமும் அதை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அந்த கட்சி ஆட்சியமைக்க இன்னும் 12 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை..

எனவே, ஏற்கனவே வெற்றிபெற்ற மற்ற கட்சிகளின் ஆதரவை பெற தவெக முயற்சி செய்து வருகிறது. அதேநேரம் அதிமுக மற்றும் திமுக போன்ற கட்சிகளுடன் தவெக பேசவில்லை. அந்த கட்சிகளிடம் ஆதரவு கேட்க விஜய் விரும்பவில்லை எனத்தெரிகிறது. எனவே அந்த கட்சிகளின் கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளின் ஆதரவை பெற தவெக முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில்தான், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவளிக்க முன் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் பாஜக கூட்டணியில் இருக்கும் எந்த கட்சியுடன் ஆதரவு கேட்கக் கூடாது என காங்கிரஸ் நிபந்தனை  விதித்திருக்கிறது. அதை விஜயும் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது. எனவே, அதிமுக கூட்டணி கட்சிகளுடன் பேசமுடியாது.  அதோடு, விஜய்க்கு ஆதரவு கொடுப்பதில்லை என்கிற மனநிலையில் அதிமுக இருப்பதாக சொல்லப்படுகிறது..

எனவே திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் மட்டுமே ஆதரவை பெற வேண்டிய நிலையில் தவெக இருக்கிறது. காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களின் ஆதரவை கொடுக்கும் நிலையில் தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் ஆதரவை பெற தவெக முயற்சி செய்யும்.
இது நடந்தால் மட்டுமே விஜய் முதல்வராக முடியும்..
About Writer
பாலகிருஷ்ணன்