தமிழகத்தில் உருவாகிய போட்டி காங்கிரஸ்.. 20 தொகுதிகளை ஒதுக்கிய தவெக தலைவர் விஜய்?
தமிழக காங்கிரஸ் கட்சியில் திமுகவுடனான கூட்டணி ஒதுக்கீட்டால் அதிருப்தி அடைந்துள்ள நிர்வாகிகள், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி நகர தொடங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் டி.செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, இந்த மோதல் வெடித்துள்ளது. த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா முன்னதாகவே குறிப்பிட்டபடி, காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் அக்கட்சி அலுவலகத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
திமுக கூட்டணியில் தங்களுக்கு சீட் கிடைக்காது என அஞ்சும் முக்கிய நிர்வாகிகள், 'போட்டி காங்கிரஸ்' ஒன்றை உருவாக்கி த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளனர். சுமார் 30 நிர்வாகிகள் வரை த.வெ.க-வுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
த.வெ.க தரப்பில் இவர்களுக்கு சுமார் 20 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது. செல்வம் தலைமையில் வெளியேறும் இந்த அணி, தனி சின்னத்தில் போட்டியிடவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்தல் நெருங்கும் வேளையில் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள இந்த உட்பூசல், அக்கட்சியின் வாக்கு வங்கியைப் பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Edited by Siva