திங்கள், 5 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 10 நவம்பர் 2021 (11:28 IST)

சென்னை எழிலகம் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சென்னை எழிலகம் பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தற்போது ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் வந்து ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வின்போது அவர் எந்தெந்த பகுதியில் மிகவும் மோசமான நிலைமை இருப்பதாகவும் எந்தெந்த பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்
 
மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பேரிடர் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு ஒருசில முக்கிய ஆலோசனையையும் வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது