புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 9 நவம்பர் 2021 (21:02 IST)

ஸ்டாலின், வைகோவுக்கு விருது அறிவித்த திருமாவளவன்!

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கும் விருதுகளை திருமாவளவன் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அறிவித்துள்ளார் 
 
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வொரு வருடமும் சிறந்த மனிதர்கள்  விருதை விடுதலை சிறுத்தைகள் கட்சியால் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
அந்த வகையில் 2021 ஆம் ஆண்டின் அம்பேத்கர் சுடர் என்ற விருது முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 2021 ஆம் ஆண்டின் பெரியார் ஒளி என்ற விருது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு வழங்கப்படுகிறது
 
இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் சற்று முன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது