1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. cm stalin says about fishermen

இலங்கையில் தமிழ் மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு: முதல்வர் அதிருப்தி

இலங்கை
இலங்கையில் தமிழ் மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளனர் 
 
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 43 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்கனவே முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதினார் 
 
இந்த நிலையில் இலங்கை சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களுக்கு ஜனவரி 27ஆம் தேதி வரை காவல் நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களின் காவல் நீட்டிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும் தமிழக மீனவர்களை விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 
 
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தின் 6 முக்கிய நகரங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு!