அளித்த வாக்குறுதியில் 75% நிறைவேற்றம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!
தமிழக சட்டமன்ற தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் முக்கால்வாசி நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிப்பெற்று ஆட்சியமைத்தது. தேர்தலில் திமுக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்திருந்த நிலையில் அவற்றை நிறைவேற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் தற்போது திமுக செயல்படுத்திய திட்டங்கள் குறித்து வீடியோ வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 8 மாதங்களில் 1,641 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு அதில் 1,238 அறிவிப்புகளுக்கு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும், திமுக அறிவிப்புகளில் 75% நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.